நீங்க எல்லாம் போய் ஐபிஎல் விளையாடுங்க... இந்தியாவின் படு மோசமான தோல்விக்கு சரத்குமார் போட்ட ட்வீட்
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடைப்பெற்றது. ஏற்கனவே பாகிஸ்தானுடன் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை உருவானது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்னும் ஹர்திக்பாண்டியா 23 ரன்களுமே எடுத்தனர். நியூஸிலாந்து அணியை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த சூழலில் நேற்றைய நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், பலரும் பல கண்டனங்களை கூறி வரும் நிலையில் ட்விட்டரில் #BanIPL என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது,. இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் தோல்விக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நேற்றைய ஆட்டம் ஆனது பொறுப்பற்ற வெட்கப்படத்தக்க ஆட்டம், நமீபியா, ஸ்காட்லாந்து, மற்றும் ஆப்கான் அணிகளுக்கு எதிரான போட்டியில் அசிங்கப்படுவதற்குள் போட்டியில் இருந்து வெளியேறுவது நல்லது என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
மேலும், மற்ற அணிகள் தங்கள் நாட்டுக்காக ஆடுகிறார்கள் எனவும், டி20 ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் எங்கள் வீரர்கள் ஐபிஎல் மட்டுமே விளையாடட்டும் என ட்விட் செய்துள்ளார்.
Substandard Shameful irresponsible performance of our team, they should pull out before we get humiliated by Namibia,Scotland and Afghanistan, others are playing for their country and seem to have studied T 20 game better,let our boys play IPL #T20WorldCup21 #IndiaVsNewZealand
— R Sarath Kumar (@realsarathkumar) October 31, 2021