அப்போ பிக் பாஸ் போட்ட கண்டிஷனா? பூர்ணிமா புலம்பலுக்கு விளக்கம் கொடுத்த நடிகை
பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமாவுடன் ஒழுங்காக பேசாமல் போனதற்கான காரணத்தை நடிகை இந்துஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
50 நாட்களை கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி தினமும் ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கின்றது. போட்டியாளர்கள் இது ஒரு விளையாட்டு என நினைக்காமல் வன்மத்தை கக்கி வருகின்றார்கள்.
பிக்பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்களான பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் பிரதீப் இருக்கும் வரையில் கலைக்கட்டிய நிகழ்ச்சி தற்போது ஓரளவு சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பூர்ணிமா பற்றி நடிகையின் கருத்து
இந்த நிலையில், பார்க்கிங் பட புரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஆகியோர் இருவரும் சமிபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.
இதன் போது இந்துஜா பூர்ணிமாவிடம் சரியாக கதைவில்லை என்றும் அவர்கள் இருவரும் கல்லூரி தோழிகள் என்றும் புலம்பினார். இதற்கு இந்துஜா, “ பார்க்கிங் பட புரோமோஷனுக்காக நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றோம். உள்ளே செல்லும் போது பல விதிமுறைகளை கூறினார்கள்.
இதனால் நான் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். நானும் பூர்ணிமாவும் கல்லூரி தோழிகள் ஆனாலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் பேசிக்கொள்வோம். அவர் நல்ல பெண் நன்றாக விளையாடி வருகிறார். சில விடயங்கள் மாற்றிக் கொண்டால் நல்ல இடத்திற்கு வருவார்..” என பதில் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |