திருமணத்திற்கு முன்பு இந்திரஜாவின் கொலுசை கழற்றி வாங்கிய தாய்: காரணம் என்ன?
இந்திரஜாவை வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும் போது அவரது தாய் அவர் அணிந்திருந்த கொலுசை வாங்கியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகை இந்திரஜா
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவரது மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கொலுசை வாங்கிய தாய்
இந்நிலையில் இந்திரஜாவின் குடும்பத்தில் திருமணத்திற்கு முன்பு சில பழக்கவழக்கங்கள் உள்ளதாம். வீட்டில் இருக்கும் பெண்பிள்ளை எப்பொழுதும் மகாலட்சுமி என்று தான் அவதானித்து வருவார்கள்.
அவ்வாறு வீட்டின் மகாலட்சுமியாக திகழும் பெண்பிள்ளைகள் வேறொரு வீட்டிற்கு திருமணம் செய்யும் செல்லும் முன்பு பிறந்த வீட்டில் உள்ள செல்வம் செழிப்பதற்கு சில சம்பிரதாயங்களை செய்வார்களாம்.
அந்த வகையில் ரோபோ சங்கர் வீட்டில், தங்களது உண்டியலில் சேர்த்து வைத்து சில்லரை மற்றும் பண நோட்டுகளை இந்திரஜாவின் கை நிறைய கொடுத்து அதனை அவரது தாய் தனது முந்தானையில் வாங்கிக் கொள்கின்றார்.
இதற்கு வீட்டிலிருந்து வெளியேறும் மகாலட்சுமி மீண்டும் வீட்டில் தங்குவதற்கு இந்த பணத்தை இவ்வாறு வாங்கி பூஜை அறையில் வைப்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் நமது வீட்டின் மகாலட்சுமி என்பதால் அவரது கொலுசையும் வாங்கி வைப்பது ஒரு ஐதீகம் என்று அவரது கொலுசை கழற்றி வாங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |