ஐசியூவில் நடிகர் ரோபோ சங்கர் : வைரலாகும் மகள் இந்திரஜாவின் பதிவு
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மகள் இந்திரஜா சங்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரோபோ சங்கர்
ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவையில்லை என்றால் மிகையாகாது. அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவராக வலம்வருகின்றார்.
அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தனது செந்த மாமனை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக தான் நோயில் இருந்து மீண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், இன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
குறித்த விடயம் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவு தொடர்பில் விமர்சனங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிலர் அவர் தனது உடல்நலத்தில் அக்கறை காட்டவில்லை என்றும், சிலர் அவரது வாழ்க்கை முறையை விமர்சிக்கும் வகையிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வரும் பல்வேறு விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்திரஜா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், நேரம் நல்லா இல்லனா தேவையில்லாதவன் கூட தேவை இல்லாம பேசிட்டு போவான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |