தாய்பாலில் மகனுக்கு தங்க நகை செய்த இந்திரஜா- அது எப்படி செய்றாங்க? வியப்பில் ரசிகர்கள்
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தன்னுடைய தாய்பாலில் மகனுக்கு தங்க நகை செய்த காணொளி இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
தாய்பாலில் மகனுக்கு கொடுத்த பரிசு
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா மகனுக்கு தன்னுடைய சொந்த தாய் பாலைக் கொடுத்து தங்க நகை செய்துள்ளார்.
இந்த காணொளியை பகிர்ந்த இந்திரஜா, “ தாய்பாலில் செய்த நகையை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. மகனுக்கு எப்போது போட்டு பார்ப்பேன் என்றும் ஆர்வமாக உள்ளது..” என்றும் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த இணையவாசிகள் சற்று வியந்து போனதுடன், நகை பற்றி விசாரித்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
