மீண்டும் அந்த நாட்கள் வேண்டும்... கண்ணீருடன் இந்திரஜா சங்கர் வெளியிட்ட சிறுவயது புகைப்படம்!
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் குறித்து அவரது மகள் இந்திரஜா தனது ஒரு வயது பிறந்தநாள் புகைப்படத்துடன்,வெளியிட்டுள்ள கண்களை கலங்க வைக்கும் உணர்ச்சிபூரை்வமான பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு இந்த திரைப்படத்தின் பின்னர் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்தும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
அண்மையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்திரஜாவின் தந்தையான ரோபோ சங்கர் காலமானார். வெறும் 46 வயதில் இவரின் இறப்பு யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவுள்ளது.
இந்நிலையில்,இந்திரஜா தனது தந்தையுடன் இருந்த அழகிய தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
அந்தவகையில் பலரும் பார்த்திராத இந்திரஜாவின் ஒரு வயது பிறந்த நாள் புகைப்படமொன்றை தற்போது பகிர்ந்து மீண்டும் அந்த நாட்கள் வேண்டும் என உருக்கமாக பதிவிட்டிருக்கின்றார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் பலரும் இந்திரஜாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |