கோடையிலும் வீடு குளுகுளுன்னு இருக்கணுமா? அப்போ இந்த தாவரத்தை வீட்டில் வைங்க
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் வெளியில் செல்லவே யாரும் விரும்புவதில்லை. அந்தளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது.
வீட்டினுள்ளும் கூட இருக்க முடியாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகரித்து விட்டது. கொளுத்தும் வெயிலிலும் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க கூடிய தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை
பொதுவாகவே கற்றாழை உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு மிகவும் துணைப்புரியக்கூடியது. அது மாத்திரமன்றி கற்றாழை வெப்பத்தை ஊறிஞ்சும் ஆற்றல் கொண்டது. கோடை காலத்தில் கற்றாழை செடி வீட்டில் இருந்தால் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
அரேகா பனை செடி (Areca Palm Plant)
மிகவும் பிரபல்யமான உற்புற தாவரங்களுள் ஒன்று தான் அரேகா பனை செடி. இது பொதுவாக அலங்காதத்துக்கான வளர்க்கப்பட்டாலும் இந்த தாவரம் காற்றின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தாவரம் இருக்கும் இடம் எந்நேரமும் குளிர்சியாகவே காணப்படும்.
ஃபெர்ன்ஸ்(Fern Plant)
இயற்கையாகவே வீட்டை குளிர்விப்பதில் இந்த தாவரம் சிறப்பு வாய்ந்தது.இது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் காற்றில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையும் கொண்டுள்ளதால்.
கோடை காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
பாம்பு செடி
பொதுவாகவே வாஸ்து சிறப்புகள் அதிகம் கொண்ட பாம்பு செடி காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இந்த தாவரம் காற்றின் ஈரப்பதத்தை அறையில் தக்கவைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் வீட்டின் வெப்ப நிலையை குறைக்கும்.
பேபி ரப்பர் ஆலை (Baby Rubber Plant)
இந்த தாவரம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை எளிதில் உறிஞ்சி ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் வீடு எப்போதும் சுத்தமாக காற்றோற்றத்துடன் குளிர்ச்சியாக இருக்கும்.
கோல்டன் பொத்தோஸ் (Golden Pothos Plant)
இந்த தாவரம் காற்றை சுத்திகரிப்பதில் பெரிதும் சிறப்பு வாய்ந்தது. இந்த தாவரத்தை வீட்டில் வைத்தால் கோடைகாலத்திலும் வீட்டின் உற்புறம் குளுகுளுவென இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |