இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்
இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஹரியானா மாநிலத்தின் ஜின் (Jind) ரயில் நிலையத்திலிருந்து சோனிபட் (Sonipat) வரை இயக்கப்படும் இந்த பசுமை ரயில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து இயங்குகிறது. இயக்கத்தின் போது நீரும் நீராவியும் மட்டுமே வெளியேறுவதால், காற்று மாசு ஏற்படாது.
ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பூஜ்ஜிய மாசு: இந்த ரயில் இயங்கும்போது பிற ரயில்களைப் போல எந்தவிதமான நச்சுப் புகையோ, காற்று மாசோ ஏற்படாது.
இந்த ரயில் வெளியேற்றும் ஒரே கழிவு 'நீரும் நீராவியும்' (Water and Steam) மட்டுமே.
தொழில்நுட்பம்: ஹைட்ரஜன் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலமாக ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.

வேகம் மற்றும் கட்டமைப்பு: முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய 10 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் பயணம் செய்தனர். இந்தத் திட்டம் இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட தொழில்நுட்ப முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிகமாக இருந்தாலும், நீண்டகாலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாட்டில் இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Prime Minister @narendramodi flags off India's first Hydrogen train between Jind and Sonipat at Jind railway station#HydrogenTrain #भारत_की_पहली_हाइड्रोजन_ट्रेन @RailMinIndia
— PIB India (@PIB_India) July 17, 2026
Watch: ⬇️ pic.twitter.com/j1lJCliqRs
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |