Masterchef பட்டத்தை வென்ற இந்தியர்: பரிசுத்தொகை மட்டும் இத்தனை கோடியா?
சமையல் கலை போட்டியான மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியாவின் சீசன் 13 முடிவடைந்து விட்டது. இதன் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயண் மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியாவின் வெற்றியாளராகி உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
பிரஷர் டெஸ்டில், கிஷ்வர் சவுத்ரி மற்றும் பீட் கேம்பெல் ஆகிய இரு இறுதிப் போட்டியாளர்களை தோற்கடித்து அவர் கோப்பையை வென்றார்.
வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Catch up on all the Grand Finale greatness! ?
— MasterChef Australia (@masterchefau) July 13, 2021
Episode now on 10 play ? https://t.co/wu7xjy3rrr #MasterChefAU pic.twitter.com/M4IpUp7emK
"உங்களை நம்பும் நபர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடினமாகச் செயல்படுங்கள். நீங்களே உங்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். இதை யார் படித்தாலும், நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று அவர் எழுதியுள்ளார்.
இதனோடு அவர் இறுதி எபிசோடின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வெகுமதியைப் பொறுத்தவரை, ஜஸ்டின் மாஸ்டர்ஷெஃப் கோப்பையுடன் 250,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ .1.86 கோடி) பரிசுத் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது.