17 மணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்த இந்திய பெண் விமானி - குவியும் வாழ்த்துக்கள்
17 மணிநேரம் விமானத்தை இயக்கி இந்திய பெண் விமானி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை கிட்டத்தட்ட 17 மணிநேரம் தொடர்ச்சியாக பெண் விமானிகள் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
மொத்த பயணமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்துள்ளனர்.
இச்சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இந்தியாவின் இளம் கேப்டன் சோயா அகர்வால் இடம்பெற்றுள்ளார்.
மேலும், விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காவும் உலகம் எங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த பெருமை கிடைத்துள்ளது.
இதற்கு அவர், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற விமான அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று சோயா அகர்வால் கூறினார்.