வண்ண வண்ண பொடியை அள்ளி தெறித்து ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்திய வீரர்கள்...!
வண்ண வண்ண பொடியை அள்ளி தெறித்து இந்திய வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஹோலி பண்டிகை
இந்தியாவின் வண்ணமயமான பண்டிகைகளில் ஹோலி திருவிழாவும் ஒன்று. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது.
ஹோலி பண்டிகையின் தனிச்சிறப்பு என்னவென்றால் வயது வித்தியாசமின்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.
குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தீய சக்திகளை நல்லவையாக மாற்றி வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்டமாக ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்திய வீரர்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வண்ண, வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா வண்ணப்பொடியை எடுத்து வந்து சக வீரர்கள் கன்னத்தில் தடவ, சக வீரர்கள் ரோகித் சர்மா மீது வண்ணப்பொடியை கொட்டி விளையாடி மகிழ்ந்தனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Colours, smiles & more! 🥳 ☺️
— BCCI (@BCCI) March 8, 2023
Do not miss #TeamIndia’s Holi celebration in Ahmedabad 🎨 pic.twitter.com/jOAKsxayBA