உடனே உங்கள் Smartphone-ல் இதை செய்யுங்கள்- பாதுகாப்பு எச்சரிக்கை கூறும் அரசு
இக்காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது சகஜமாகிவிட்டது. எப்போது வரும், எப்படி வரும் என்பதையே நம்மால் சொல்லமுடியாது.
இந்நிலையில், இந்திய அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இணைய பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கை
பெரும்பாலான இந்திய யூசர்கள் Google நிறுவனத்தின் Android platform அடிப்படையிலான போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த போன்களில் தீங்கிழைக்கும் Bucks கண்டறியப்பட்டுள்ளதாக அரசின் கீழ் இயங்கும் CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவிக் குழு தெரிவித்துள்ளது.
Saving, Screen recording, File manager, Login, PDF, Auto fill ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்தும் போது, அதனை Hackers அணுக அனுமதிக்கும் சில Bucks இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயிட்ட அறிக்கை
Configuration, System, Google Play System Updates, Imagination Technologies, MediaTek Components, Unisac Components, Qualcomm Components மற்றும் அதன் Source elements ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த பாதிப்புகள் Android-ல் உள்ளன என்று ஜன.11 அன்று CERT-IN வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட Hardware அல்லது Software-களில் மிகவும் ஆபத்தான என்று அறியப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான Smartphone-கள் இவற்றுடன் ஒன்றி இருப்பதால், அவை அனைத்திலும் பாதுகாப்பு குறைபாட்டிற்கான காரணிகள் இருக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருப்பது பழைய Android பதிப்புகளான 11, 12, 12எல், 13 என்று நினைத்திருக்கும் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை இந்த குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய Android 14 யூசர்களுக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. Samsung போன்ற பெரிய நிறுவன Premium Smartphone-களும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக அனைவரும் தங்களின் Smartphone-களை Update செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனர்களின் தனியுரிமை தகவல்களைத் திருட, Target வைக்கப்பட்ட Smartphone-களில் Malware போன்ற Virus-களை உலாவ விட்டு, அதில் உள்ள தகவல்களைத் திருடுவதே இந்த Bucks-ன் வேலையாக இருக்கும் என்று அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தங்கள் platform-ன் மேம்படுத்தப்பட்ட Security patch-ஐ Update செய்து கொள்ளும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Update செய்ய என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் Smartphone-ன் Settings பக்கத்தைத் திறக்கவும்.
- இப்போது About பகுதிக்குச் சென்று Android version தெரிந்துகொள்ளவும்.
- தொடர்ந்து Updates பகுதிக்குச் சென்று, (check for update) உங்கள் இயங்குதளத்திற்கு புதிய version ஏதேனும் வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
- இல்லையெனில் புதிய version நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வெளியேற வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |