டயட் சீக்ரெட்டை உடைத்த பிரபல கிரிக்கெட் வீரர்: 25 வயது வரைக்கும் இப்படித்தான் இருந்தாரா?
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தனது டயட் பற்றியும் இன்னும் தன்னைப்பற்றிய தகவல்களை கூறுவது போல வீடியோ ஒன்று தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கெப்டன் விராட் கோலி. இவருக்கு இப்போது 34 வயதாகிறது.
இந்திய டி20 அணியில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவில்லை.
இந்த தொடருக்கு அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் களமிறங்குவார்.
மேலும், இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் வாமிகா என்ற பொண் குழந்தையும் உள்ளார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், விராட் கோலி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருவர் கேள்விகள் கேட்க அதற்கு அடுத்தடுத்து பதில்களை கொடுத்திருக்கிறார்.
அதில். தனது 25 வயதில் இப்படித்தான் இருந்தேன் எனவும் மேலும் சில சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். உங்கள் மகிழ்ச்சியான இடம் எது அல்லது எங்கே? எனக் கேட்டதற்கு தனது மகிழ்ச்சியான இடம் வீடு எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நீங்கள் முயற்சித்த வித்தியாசமான உணவு முறை எது? எனக் கேட்டதற்கு
Straight from the heart. #ad @StayWrogn pic.twitter.com/FK6cojs7by
— Virat Kohli (@imVkohli) January 31, 2023
25…24 வயது வரை… இது எப்போதும் வித்தியாசமான உணவுமுறை. அதாவது உலகில் உள்ள அனைத்து ஜங்க் உணவுகளையும் நான் உண்மையில் சாப்பிட்டேன். அதனால் எனக்கு விசித்திரமாக இருந்தது, இது சாதாரணமானது என பதிலளித்திருக்கிறார்.