இந்திய கிரிக்கட் அணியின் முக்கிய வீரர் மருத்துவமனையில் அனுமதி - என்னாச்சு?
டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணியின் முக்கிய வீரர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிகட் டி 20
கிரிக்கட் டி20 போட்டி மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்க அணியை வென்றுள்ளது.
அதற்கடுத்து இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை வென்றுள்ளது.
நாளை இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியில் ஒரு வீரர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக அதிகமானோர் விலகி உள்ளனர். இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் வில உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சமீப காலமாக அதிரடியாக விளையாடி வரும் இளம் ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மாவும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காய்ச்சல் இருந்தபோதும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவர் கோல்டன் டக் அவுட் ஆனார். பின்னர் உடல்நலக் குறைவால் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.

தற்போது அவருக்கு வயிறு தொடர்பான பிரச்சினையும் இருப்பதாக இந்திய உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் தெரிவித்துள்ளார். இவர் குணமடைந்து மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஒரு சந்தோஷமான விடயமும் நடக்க உள்ளது. காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாமல் இருந்த நட்சத்திர பௌலர் ஜஸ்பிரித் பும்ரா குணமடைந்து மீண்டும் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக பந்துவீசாத அவர் மீண்டும் உடல் சுகத்தால் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விலா எலும்பு காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தரும் பிசிசிஐ அனுமதியுடன் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |