காணொளி காட்சி மூலம் விவாகரத்து பெற்ற இந்திய தம்பதி - இது எப்படி?
கனடாவில் வேலை பார்க்கும் தம்பதி வானொலி காட்சி மூலம் விவாகரத்து பெற்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காணொளி விவாகரத்து
தற்போது கனடாவில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி கடந்த 2022ம் ஆண்டு மாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் தானே மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இவாகள் இந்தியாவில் திருமணம் செய்து கனடாவில்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
இப்படி இருக்க 2023ம் ஆண்டு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கனடாவில் வேறு வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிரிந்து வாழும் இந்த தம்கினருக்கு பெண் 24 வயது ஆண் 31 வயதை சேர்ந்தவர். இவர்கள் தங்களுக்குள் கருத்து முரண்பாடு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் உள்ள குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர்.
இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்ததால் காணொளி காட்சி மூலம் இவர்களுக்கு விவாகரத்து வழக்கிற்கு விசாரணை நடைபெற்று உள்ளது. இதன் பின்னர் இவர்களுக்கு 6 மாத காலம் கொடுக்கபட்டிருந்தது.

இருந்தும் அவர்கள் 6 மாதம் முடிந்த பின்னும் விவாகரத்தில் உறுதியாக இருந்துள்ளனர். இதுகுறித்து நீதிபதி ஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், "பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை.
விவாகரத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதன்பின்னர் முறைப்படியாக பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் விசாரித்து விவாகரத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |