அமெரிக்காவுக்கு ஏன் வந்தீர்கள்? இந்திய வம்சாவளியினரை தாக்கிய அமெரிக்க பெண்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்களை அமெரிக்க பெண் ஒருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்க பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் கார் பேட்டை ஒன்றில் புதன்கிழமை இரவு இந்திய அமெரிக்க பெண்கள் நான்கு பேரை மெக்சிகோ அமெரிக்க பெண் ஒருவர் தாக்கிய நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்கள் சும்மா இருக்கையில் எங்களிடம் வந்து ஏன் பேச்சு கொடுக்கிறீர்கள்?” என்று அந்த மெக்சிகோ அமெரிக்க பெண்ணைப் பார்த்து இந்திய அமரிக்க பெண்கள் கேட்டபோது, “உங்களை எனக்கு பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.

இந்தியாவில் சிறந்த வாழ்க்கை இல்லாததால்தான் இங்கே நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் பேசும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. “அமெரிக்காவுக்கு வந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெற விரும்புகிறீர்கள். நான் அமெரிக்காவில் பிறந்தேன். நீங்கள் அமெரிக்காவிலா பிறந்தீர்கள்?
இந்தியாவில் வாழ்க்கை பிரமாதம் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இங்கே வந்தீர்கள்? திரும்பி போக வேண்டியதுதானே?” என்று அந்த பெண் திட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் காணொளி எடுத்த இந்திய பெண்களை தாக்க முயன்றதோடு, துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
நான்கு பெண்களில் ஒருவரான ராணி பானர்ஜி என்பவர் காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.
A racist woman in Texas harasses a group of Indian people just for having accents.
— Fifty Shades of Whey (@davenewworld_2) August 25, 2022
This behavior is absolutely repulsive. pic.twitter.com/ZvX3mdQ6Wm