எனக்கு யாரும் முன்னுதாரணம் கிடையாது... - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
எனக்கு யாரும் முன்னுதாரணம் கிடையாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கினார். இதனையடுத்து ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2011ம் ஆண்டு வெளியான் ‘அட்டகத்தி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனையடுத்து காக்கா முட்டை, மெய், சாமி 2, லஷ்மி, செக்கச்சிவந்தது வானம், கனா, வடசென்னை, திட்டம் இரண்டு, கட்டப்பாவ காணோம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
இந்நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
எனக்கு யாரும் முன்னுதாரணம் இல்லை. நானே தான் முன்னுக்கு வந்தேன். இப்போ சோசியல் மீடியா நன்றாக வளர்ந்து விட்டது. அதனால் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. இன்ஸ்டாவில் நிறைய வீடியோ போடலாம். யூடியூப் சேனல் தொடங்கி அது மூலமாக பாப்புலராகலாம்.
முதலில் டிக்டாக் இருந்தது. அதை இப்போது இந்தியாவில் தடை செய்துவிட்டாங்க. ஆனால், டிக்டாக் மூலம் எவ்வளவு பேர் பாப்புலர் ஆகியிருக்காங்க. டிக்டாக் மூலம் ஹீரோயின் ஆகியிருக்காங்க. நடிகர் ஆகியிருக்காங்க என்றார்.