லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்... எமனாக இருந்த பிளக்ஸ்
சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் கீழே விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தந்தை முத்துவீரப்பன் மரணம் அடைந்த நிலையில், தனது தந்தையின் பட திறப்பு விழாவிற்கு பாரிய பிளக்ஸ் ஒன்றினை வைத்துள்ளார்.
அந்த வழியாக வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் திடீரென விஜயராணி மீது விழுந்ததில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.