INDvsNZ; இந்திய அணியின் சுழலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி.. டெஸ்ட் தொடரை கைப்பற்றி அபாரம்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கி மும்பை வான்கடேவில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களையும் அடித்திருந்தனர். நியூசிலாந்து அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளரான அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 62 ரன்களில் சுருண்டது. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.
இதனால், 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டு நாள் ஆட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
அதிகபட்சமாக மிட்செல் 60 ரன்களையும், நிக்கோலஸ் 44 ரன்களையும் அடித்திருந்தனர். இதனால், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
India win by 372 runs and take the series 1-0 ?
— ICC (@ICC) December 6, 2021
R Ashwin wraps up the New Zealand innings after Jayant Yadav’s four-wicket haul.#WTC23 | #INDvNZ | https://t.co/EdvFj8yST5 pic.twitter.com/Z65KX0xCVv