வெளிநாட்டிலிருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வெளிநாடு சென்றுவிட்டு சொந்த நாடு திரும்பும் நபர்கள் பல இன்னல்களை சந்திப்பார்கள். அதிலும் நகையை கொண்டுவருவதில் பல சிக்கலும் வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்திற்கு மதிப்பு அதிகமே. ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் பல நிபந்தனைகள் அதிகமாகவே இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் நபர்கள் குறிப்பிட்ட அளவில் தங்கம் கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் சிங்கப்பூரிலிந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் என்ற தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய சுங்கத்துறை தகவலின் அடிப்படையில் ஓராண்டு அல்லது அதற்கு மேல் வசித்து நாடு திரும்பும் இந்தியர்கள் தீர்வை இல்லாமல் தங்க நகைகளை கொண்டு வரலாம்.
அதன்படி ஆண்கள், 20 கிராம் அல்லது ரூ.50 ஆயிரம் மதிப்பு நகைகளையும், பெண்கள் 40 கிராம் அல்லது 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொண்டு வரலாம் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |