சிஎஸ்கே கேப்டன் தோனி மீது வழக்கு பதிவு - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி இதுவரை அந்த அணிக்காக 4 கோப்பைகளை கைப்பற்றி தந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பிய சென்னை அணி வெறும் 4 வெற்றிகளுடன் வெளியேறியது. தொடர்ந்து அனைத்து வீரர்களும் சொந்த ஊர் திரும்பினார்கள்.
தோனி ராஞ்சிக்கு சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், தோனி மீது FIR பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசடி புகார்
தோனி கிரிக்கெட்டை தவிர்த்து விளம்பரங்களிலும் நடத்து வருகிறார். அப்படி நியூ க்ளோபல் ப்ரோடியூசர் இந்தியா லிமிடேட் நிறுவனத்திற்காக விளம்பரத்தில் நடத்திருந்தார்.
அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்க ஸ்கே என்னும் உரம் தயாரிக்கும் நிறுவனம் 30 லட்சத்திற்கான காசோலையை பெற்ற நிலையில், அதில் பணம் இல்லை என வங்கி தெரிவித்திருக்கிறது.
இதனால், அந்நிறுவனத்தை தோனி பிரபலப்படுத்தினார் என்பதால் தோனி மீதும் மோசடி புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த கோர்ட், மேல் விசாரணையை மஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. அவர் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.