ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனார். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு இருந்த அதிபர் தப்பித்து சென்றார்.
இந்நிலையில் அங்கு தலைமை இல்லை, தலிபான்களின் ஆட்சியோ அச்சுறுத்தலைத் தவற வேறு ஏதும் தருவதாக இருக்காது என்பதில் அந்நாட்டு மக்களுக்கு ஐயமில்லை. வேறு வழியில்லாமல், உயிர் மட்டும் பிழைத்தால் போதுமென்ற காபூல் விமான நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தற்போது ஆப்கன் நிலவரம் குறித்தும், தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
