அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார கிரிக்கட் வீரர் யார் தெரியுமா?
இந்தியாவிலே பலராலும் அறியப்படாத கிரிக்கட் வீரரின் சாத்து மதிப்பு பற்றி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பணக்கார கிரிக்கட் வீரர்
உலகில் தற்போது கிரிக்கட் என்பத பாரம்பரியமாக பார்க்கப்படுகின்றது. இந்திய கிரிக்கட் வீரர்கள்விளையாட்டு மற்றும் விளம்பரம் மூலம் பெரும் தொகையை சம்பாதிக்கின்றனர்.
இதில் மிகவும் பிரபலமானவர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களாக கருதப்படுகின்றனர்.
இவாகள் அனைவரும் மக்களால் அறியப்பட்டவர்கள். ஆனால் மக்களால் அறியப்படாத இவர்களை தாண்டிய பணக்காரராகவும் உள்ள ஒரு கிரிக்கட் வீரர் இருக்கின்றார். இவரின் பெயர் சமர்ஜித்சின் ரஞ்சித்சிங் கெய்க்வாட் பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார்.
ஏப்ரல் 1967ல் பிறந்த சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட், பரோடாவின் அரச குடும்பமான கெய்க்வாட் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினி ராஜே தம்பதியின் ஒரே மகன் ஆவார்.
இவா பாடசாரை நிகழ்வுகளில் கூட பல விளையாட்டுக்களில் தலைமை தாங்கி உள்ளார்.இவர் ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் 1987-1988 மற்றும் 1988-89களில் பரோடா அணிக்காக விளையாடினார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், விளையாட்டில் தனது ஈடுபாட்டை தொடர்ந்து காட்டி வந்தார். இதை தொடர்ந்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் மற்றைய கிரிக்கட் விரரை போல பிரபலமான கிரிக்கட் வீரர் இல்லாவிட்டாலும் இவரே மற்றைய கிரிக்கட் வீரரை விட அதிக பணம் கொண்டவர்.இவரது நிகர மதிப்பு ரூ.20,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவா தனது தந்தை இறப்பிற்கு பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் இல்லமான பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் பரோடாவின் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
அவர் தனது அரச பதவியை தவிர, குஜராத் மற்றும் பனாரஸில் உள்ள 17 கோயில்களுக்கான அறக்கட்டளைகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.
சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட், குஜராத்தின் வாங்கனேர்(Wankaner) அரச குடும்பத்தை சேர்ந்த ராதிகராஜே கெய்க்வாட்டை மணந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து, பரோடா அரச குடும்பத்தின் மரபுகள் மற்றும் பொறுப்புகளை நிலைநிறுத்தி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |