உலகின் 2ஆவது பணக்காரரின் ஒருநாள் வருமானம் மட்டுமே இத்தனை கோடியா? ஷாக்காகிடாதீங்க!
உலக பணக்காரர்கள் வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள கௌதம் அதானியின் ஒரு நாள் வருமானம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான கவுதம் அதானி 2021ஆம் ஆண்டில் தினசரி 1612 கோடி ரூபாய் சொத்துகளை ஈட்டியுள்ளதாக IIFL Wealth Hurun India Rich List 2022 பணக்காரர் பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்து வந்தார்.
அவரை முந்தி இந்தியாவின் டாப் பணக்காரராக அதானி முதலிடத்தில் உள்ளார்.
திடீரென்று உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு
அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 10,94,400 கோடி ரூபாய். அதானி குழுமத்தின் ஏழு நிருவனங்களின் பங்கு விலை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதுமட்டுமல்லாமல், பசுமை மின்சக்தி துறையில் சுமார் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாகவும் அதானி உறுதியளித்துள்ளார் என்று Wealth Hurun India Rich List 2022 ரிப்போர்ட் சுட்டி காட்டுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிட்டால், கவுதம் அதானி மற்றும் அவரது சகோதரரின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் பணக்காரர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு 15.4 மடங்கு உயர்ந்து முதலிடத்துக்கு வந்துள்ளார்.