இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்... இனி வரும் நாட்களில் பாதிப்பு தீவிரமடையும்! அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் சோதனைக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசையினை ஆய்வு செய்ததில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
13614 மாதிரிகளை நாட்டில் உள்ள 10 ஆய்வு மையங்களில் மரபணு வரிசை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 1189 மாதிரிகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா V1617 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானாவை மகாராஷ்டிரா விதர்வா பகுதியைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது.
தற்போது குறைந்த அளவே பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் நாளடைவில் இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த புதிய கொரோனா மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.