பென்சில், மேகி விலை அதிகமாகிடுச்சி! அம்மா அடிக்கிறாங்க: வேதனையில் மோடியிடம் சிறுமி கேள்வி
உத்திர பிரதேச சிறுமி ஒருவர் தான் பென்சிலை தொலைத்ததற்காக தனது அம்மாவிடம் அடி வாங்கியதால், இந்திய பிரதமர் மோடியை சரமாரியாக கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்டி வரியால் பெரும் பாதிப்பு
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தி கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்தது.
பாக்கெட்டில் அடைத்து விற்க்கப்படும் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
மேலும் பென்சில் ஷார்ப்பனர், ரப்பர், மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 20 முதல், 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
மேலும் 5 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட பென்சில், ரப்பர், ஷார்ப்பனர் ஆகியவற்றின் விலை தற்போது 2 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

சிறுமியின் வேதனையாக கடிதம்
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்தி துபே என்ற சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தான் 1ம் வகுப்பு படித்து வருவதாகவும், மோடிஜி நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கிங்க.
என் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மோடிஜி நீங்கள்தான் காரணம். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது.
தனது தாய் பென்சில் கேட்டால் அடிப்பதாகவும், பள்ளியில் தனது பென்சிலை திருடுவதாகவும், மேகி வாங்க நான் 5 ரூபாய் வைத்திருக்கும் நிலையில், தற்போது 7 ரூபாய் என்ற கூறுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த சிறுமி பள்ளியில் பென்சிலை தொலைத்துவிட்ட நிலையில், வீட்டில் வேறு பென்சில் கேட்டதற்கு தாய் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே இந்த கடிதத்தினை எழுதியுள்ளாராம்.
சிறுமியின் கடிதம் தற்போது நாடு முழுவதும் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
