நாடு முழுவதும் இலவச இன்டர்நெட் வசதி! குஷியில் இந்திய மக்கள்
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இணைய வசதியை இலவசமாக வசதியை வழங்க வலிறுத்தப்பட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலவச இன்டர்நெட்
மாநிலங்களவையில் சிபிஐ(எம்) உறுப்பினர் வி.சிவதாசன் 2023 டிசம்பரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய நிலையில், மாநிலங்களவையில் விவாதத்திற்கு இந்த இலவச இணையவசதியை குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச இணைய சேவையை பயன்படுத்துவதற்கான உரிமை உண்டு என்றும், அனைத்து குடிமக்களுக்கும் இணைய வசதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும மசோதா முன்மொழிகிறது.
அதாவது இந்த வசதியானது சமூகத்தில் டிஜிட்டல் பாகுபாட்டை குறைக்கும் என்றும், அரசியலமைப்புச் ச்ட்டம் அனைத்து, குடிமக்களும் இந்த கருத்து சுதந்திரத்தைப் பெறவும் இந்த இணைய வசதி பயன்படும் என்று கூறப்படுகின்றது.
மத்திய அரசு தானாகவே அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக இணைய சேவை வழங்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு இலவச சேவைகளை வழங்க முழுமையாக மானியம் வழங்க வேண்டும் என்று இந்த மசோதா பரிந்துரை செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |