திருநங்கையாக இருக்கும் மனைவிக்காக கர்ப்பமாக இருக்கும் கணவர்!
திருநங்கையாக இருக்கும் தன்னுடைய திருநம்பி கர்ப்பமாக இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கேரள மாநிலம், கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியிலுள்ள தம்பதிகளான சஹத் - ஜியா இருவரும் மூன்றாம் பாலின தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
மூன்றாம் பாலின தம்பதிகள்
இவர்கள் பார்ப்பதற்கு கணவன் மனைவி போல் இருந்தாலும் கணவன் தான் மனைவி, மனைவி தான் கணவன் என்ற படி வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இயற்கையாக ஆண், பெண்ணாக பிறந்து அதன் பின்னர் சில ஹார்மோன்ஸ் மாற்றத்தினாலும், காதலாலும் இவ்வாறு மாறி வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் கணவனாக இருக்கும் ஜியாவுக்கும் மணைவியாக இருக்கும் சஹத்திற்கும் முதல் குழந்தை பிறக்கவிருப்பதை புகைப்படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இவர்களுக்கு என ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடி செய்து குறிப்பிட்ட ஒரு பிரபல வைத்தியசாலையில் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
கர்ப்பமாக இருக்கும் திருநம்பி
அதற்கு மருத்துவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
இந்த முறையை சரியாக செயற்படுத்தி தற்போது ஜியா கர்ப்பமாக இருக்கிறார். இவர்களின் அன்பு குழந்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உலகிற்கிற்கு வரவிருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் மூன்று உயிர்களும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ ஷீட் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளார்கள்.