தமிழ்நாட்டில் கண்டிப்பாக நாம் பார்க்க வேண்டிய இடங்கள்: விளக்கத்துடன் கூடிய ஒரு சுவாரஸ்யம்!!
பொதுவாக விடுமுறை என்றாலே சுற்றுலா தான் ஞாபகம் வரும்.
அந்த வகையில் சுற்றுலா என பார்க்கும் பொழுது இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன.
இந்தியாவின் மையப்புள்ளி தமிழ்நாடு என்று கூறுவார்கள்.
இந்த இடம் ஒரு காலத்தில் செழிப்பான பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த மாநிலம் இன்று வெற்றிகரமாக முன்னேற வழி வகுக்கிறது.
சமீபகாலமாக தமிழ்நாடு உலக சுற்றுலா பயணிகள் கவனம் அதிகமாகி வருகின்றது. அப்படி என்ன இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நீங்கள் யோசிக்கலாம்.
இதன்படி, தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான இடங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
1. வேளாங்கண்ணி
“வேளங்கண்ணி‘ என அழைக்கப்படும் இடம் வங்காள விரிகுடாவின் கரையில் இருக்கின்றது. இது முக்கியமான கிருத்துவ யாத்திரை தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. விடுமுறையை இறைவனுடன் கழிக்க வேண்டும் என்றால் இந்த இடத்திற்கு செல்லலாம். பலரின் நம்பிக்கைகளின் மறு உருவமாக இருக்கின்றத.
2. வேதாரண்யம்
வேதாரண்யம் என அழைக்கப்படும் இந்த இடமானது திருமறைக்காடு எனவும் அழைக்கப்படுகின்றது. இங்கு சென்றால் உப்பு யாத்திரை மற்றும் காந்திஜியின் தண்டி யாத்திரை செய்யலாம். நாகப்பட்டினத்திலிருந்து 55 கிமீ தூரத்தில் வேதாரண்யம் அமைந்துள்ளது.
3. திருநெல்வேலி
இந்தியா - தமிழ்நாடு என கூறும் போதே தமிழர்களின் சான்றுகள் இங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில், திருநெல்வேலி என அழைக்கப்படும் நகரம் 2000 வருடங்கள் பழமையானது என புராணங்கள் கூறுகின்றது.
இது “நெல்லை” எனவும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் ஒரு காலத்தில் பாண்டவர் தலைநகரமான இந்த நகரம் காந்திமதி நெல்லையப்பர் சிவன் கோவிலினால் சிறப்பு வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி தாமிரபரணி தான் இங்கு சிறப்பு என கூறலாம்.
4. குற்றாலம்
குற்றாலம் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள நீர்வீழ்ச்சி தான். அழகிய மேற்கு தொடர்ச்சி மலையின் பின்னணியில் இந்த இடம் இருக்கின்றது. நீர் சிகிச்சை பண்புகள் கொண்டது இந்த இடத்திற்கு கீல்வாத மூட்டுகள், நாள்பட்ட தலைவலி மற்றும் நரம்பு கோளாறு ஆகிய பிரச்சினையுள்ளவர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
5. மலைக் கோட்டை
சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதன் உயரம் சரியாக 83 மீட்டர் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கு அதிகமாக வருகை தருவார்கள்.
3 வது நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள கல்வெட்டுக்கள், சான்றுகள் இங்கு அதிகமாக இருக்கின்றன. வீட்டில் சிறுவர்கள், பெரியார்கள் இருப்பார்கள் என்றால் விடுமுறையை இங்கு கழிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |