இந்தியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! ஆய்வாளரின் கணிப்பு பலிக்கின்றதா? பீதியில் மக்கள்
துருக்கியில் நிலநடுக்கத்தினை முன்கூட்டியே கணித்து கூறிய ஆய்வாளர் ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறிய நிலையில், இன்று குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவான இதனால் துருக்கி நாடே நிலைகுலைந்து போயுள்ளது.
அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து நாடுகளிலும் இந்த நலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படை வீரர்கள் மீட்டெடுக்க போராடி வருகின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தினை 3 நாட்களுக்கு முன்கூட்டியே நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் கூறியிருந்தும் அந்நாட்டு அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவில் நிலநடுக்கம்
இந்நிலையில், ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் இந்தியாவில் நில அதிர்வு ஏற்பட போவதாக காணொளி ஒன்றில் பேசியுள்ளார். குறித்த காட்சியிலல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏற்பட்டு அதன் விளைவுகள் பாகிஸ்தான் வழியே இந்தியா வரை ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.
தற்போது குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை 3.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.