பட்ஜெட்டின் எதிரொலி: மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள தங்கம் விலை! சவரனுக்கு ரூ.2,080 குறைவு
தங்கம் இன்று காலையில் சவரனுக்கு ரூ.120 குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மத்திய பட்ஜெட்டில் தங்கம்விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
பெண்கள் அதிகமாக விரும்பு ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை கொஞ்சம் குறைந்திருந்தது.
இன்று இந்தியாவில் நடப்பு (2024 - 2025) நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் சுங்கவரியை 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான வரியை 6.4 சதவீதமாக குறைத்து அறிவித்திருந்தார்.
இதனால் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது.
அதாவது கிராம் ஒன்றிற்கு ரூ.260 குறைந்து ரூ. 6,550 ஆகவும், சவரனுக்கு ரூ.2080 குறைந்து ரூ. 52,200 ஆகவும் விற்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |