இந்திய அளவில் ட்ரெண்டான 3 வயது சிறுமி... தனியாக மருத்துவமனைக்கு வந்து செய்த காரியம் என்ன?
இந்தியாவில் 3 வயது சிறுமி ஒருவர் தனக்கு, சளி, இருமல் இருந்ததால், தானாக கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் ஸன்ஹிபோடோ மாவட்டம் காதாஷி பகுதியை சேர்ந்த சிறுமி லிபவி(3).
இவருக்கு லேசான சளி அறிகுறி இருந்துள்ள நிலையில், தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் சிறுமி லிபவி தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து, அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்து தனியாக சென்றுள்ளார்.
முகக்கவசம் அணிந்து தனியாக வந்த சிறுமியை பார்த்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். மருத்துவரிடம் சிறுமி தனக்கு லேசான சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது.
எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா எனப் பரிசோதித்து பாருங்கள் என கூறியுள்ளதைக் கேட்டு ஆச்சரியமடைந்த, மருத்துவர் பரிசோதனை செய்துள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில், படித்தவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலும், பரிசோதனை செய்யவோ, தடுப்பூசி போடுவதற்கோ தயங்கி வருகின்றனர். ஆனால் இந்த குழந்தையின் தைரியம் ஒட்டுமொத்த மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
The medical staff were in for a pleasant surprise when 3-year old Miss Lipavi,showed up at the health centre.She reportedly had cold symptoms but since her parents had left for the paddy field,she decided to come all by herself for a checkup at the health center.@narendramodi pic.twitter.com/hPzLZg6OCi
— Benjamin Yepthomi (@YepthomiBen) June 3, 2021