தாய்க்கு நிகரான தாயகம்...! போராடிய வெற்றியை கொண்டாடுவோம் சுதந்திரமாய்
சுதந்திரம் யாரேனும் நமக்கு கொடுப்பது அல்ல அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சினிமாவில் பல வசனங்களை கேட்டிருப்போம். ஆனால் நிஜத்தில் அது மாறுப்பட்டதாகவே இருக்கும்.
ஏனெனில் இந்த ஒரு சுதந்திரம் என்ற ஒன்றை கொடியை நாட்டுவதற்கு எத்தனை உயிர்களை பலிகொடுத்திருப்போம் எவ்வளவு இரத்தங்களை சித்தியிருப்போம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பிறரை பாதிக்காமல் இருக்கும் வரை அதுவும் ஒரு சுதந்திரம் தான்.
கிடைத்த சுதந்திரம் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இன்று வரை வாழ்ந்து மடிந்த ஒவ்வொருவருக்கும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உண்ணுவதற்கு உணவும், அணிவதற்கு நல்ல ஆடையும் கொடுத்து உன்னை அனைத்துக் கொண்ட தாயகத்திற்கு பிறந்த நாள் தான் இந்த சுதந்திரக் கொண்டாட்டம்.
நாம் பெற்ற ஒவ்வொரு சுதந்திரத்திற்கு பின்னாலும் பலநூறு என்ன பல்லாயிரம் கதைகளும் வரலாறுகளும் நிச்சயமாக இருக்கும் எப்போதும் அழியாக் காவியமாக.
எப்போது சுதந்திரம்
எப்போது சுதந்திரம் எனக்கிட்டும் என்று வான்நோக்கிப் பார்த்துக் கொண்டே இருந்த எம்மக்களுக்கு புரட்சியாளர்களும், தலைவர்களும் கொடுத்த அற்புதப் பரிசே இந்த சுதந்திரம்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் அராஞகம் செய்துக் கொண்டிருந்த வேளையில் இன்று போல் அன்றொரு நாளில் 1947ஆம் ஆண்டு 15ஆம் திகதி ஒவ்வொரு இந்தியர்களின் வாழ்வில் உதயமான புதிய உதயம் தான் இந்த சுதந்திரம். சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்கள் தான்.
இன்றைய தலைமுறையினர் சுவாசிக்கும் போதும் இந்த சுதந்திரக் காற்று எங்கிருந்து வீசுகிறதென்று கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
1947ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் அராஞகம் செய்துக் கொண்டிருந்த வேளையில் நம் போராட்ட வீரர்கள் நமக்காக இரத்தம் சிந்தி எமது தேசத்திற்கு பெரும் வரலாற்றுச் சம்பவத்தை பதிவு செய்து விட்டார்கள்.
சுதந்திர தின வாழ்த்து செய்திகள்
- போராடி பெற்றுவிட்டோம் சுதந்திரத்தை..! கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை ..! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
- நம் நாட்டுப்பற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் சுதந்திரம் பேணிக்காப்போம்
- உதிரங்களை உரமாக்கி உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்
- நம் தேசம் இந்திய தேசமே... நம் மக்கள் இந்திய மக்களே... அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.வந்தே மாதரம்.
- நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு, விடுதலை உணர்வோடு அதை கொண்டாடு கத்தியின்றி, இரத்தமின்றி, ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற சுதந்திரம் இது!
- அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை இனம், மொழி கடந்து நேசிப்போம், சுதந்திர காற்றை சுவாசிப்போம்
- சாதி, மத பேதமின்றி நம் தேசத்தை நேசிக்கும் நம் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
- தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம்
- காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த். நீ சுவாசிக்க, நேசிக்க, உனக்கென ஒரு நாடு விடுதலை கொண்டாடு