INDvsWI: அரைசதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி - கொண்டாடும் ரசிகர்கள்;
இன்றைய இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டி20-க்கான போட்டியில் இந்திய அணி போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதலில் ஆடிய இந்திய அணி 186 ரன்கள் அடிக்க, அணியில் விராட் கோலி 52 ரன்னும், பண்ட் 52 ரன்கள் அடித்தார். கடினமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி வரை போராடி தோல்வியை தழுவியது.
அந்த அணியில் அதிரடியாக ஆடிய துவக்க வீரர்களான மேயர்ஸ் 9 ரன்களிலும், பிரண்டன் காக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர், இணைந்த நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் இந்திய பந்து வீச்சை அடித்து நொறுக்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். ஒரு கட்டத்தில், பிரிந்த இந்த ஜோடி கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை. 2 சிக்ஸர் மட்டுமே அடித்து தோல்வியடைந்தனர்.
இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாவெல் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என நிலையில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த போட்டியின் மூலம் விராட்கோலி இழந்த பார்ஃபமை மீட்டெடுத்துள்ளார். அவரின் அரைசதம் மூலம், சர்வதேச டி20 போட்டியில் 30-வது முறையாக அரைசதம் விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் அதிகபட்ச ஐம்பதுக்கு மேல் ஸ்கோரை சமன் செய்துள்ளார் கோலி.
கோலி 89 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை படைத்தார். ஆனால் இது ரோஹித்தை ஆடிய விட 24 இன்னிங்ஸை விட வேகமானது.
ரோகித் சர்மா 113 இன்னிங்ஸில் 26 அரைசதம் கடந்துள்ளார். இதனால் ரசிகர்கள் கோலி மீண்டு வந்ததை கொண்டாடி வருகின்றனர்.
Went down to the wire. Great character on display ?? pic.twitter.com/wLkwMIpkJL
— Virat Kohli (@imVkohli) February 18, 2022