INDvsSL சுவரில் எகிறி குதித்து செல்ஃபி எடுத்த 4 இளைஞர்கள் - கேஸ்ஸில் சிக்கிய எதனால்?
இந்தியா இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில், நட்சத்திர வீரர் விராட் கோலியை பார்ப்பதற்காக போட்டி தொடங்க 2 நாட்களுக்கு முன்பாகவே முண்டியடித்த பெங்களூரு ரசிகர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கினர்.
விராட்கோலி மீது பெங்களூர் ரசிகர்கள் அதிகளவில் பாசத்தை பொழிந்தனர். குறிப்பாக விராட் கோலியின் 4 தீவிரமான ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பெங்களூர் மைதானத்தில் இருந்த பாதுகாப்பு வேலியில் ஏறி எகிறி குதித்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.
யாரும் எதிர்பாராத நிலையில், பாதுகாப்பு வேலியை தாண்டி எகிறி மைதானத்திற்குள் நுழைந்தனர். பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு வேக வேகமாக ஓடி விராட் கோலியுடன் புகைப்படம் எடுக்க முயன்றார்கள்.
அதற்கு அவரும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும், செல்பி எடுத்து முடிக்கும் வேளையில் அந்த ரசிகர்களை நெருங்கிய பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்ற முயன்றனர்.
அப்போது தனது ரசிகர்களை எதுவும் செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக் கொண்டதால் அந்த 4 ரசிகர்கள் மீது எந்தவித தாக்குதலையும் நடத்தாமல் மரியாதையுடன் மைதானத்திற்கு வெளியே பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வரை தீயாய் பரவி வருகிறது. இதனிடையே, மைதானத்திற்குள் அத்துமீறிய 4 இந்திய ரசிகர்களை போட்டி முடிந்த பின் மடக்கிப் பிடித்த மைதான பாதுகாவலர்கள் அவர்களை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
அந்த 4 பேரில் 2 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என சுப்போன் பார்க் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது காவல் நிலையத்தில் உள்ள அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என தெரியவருகிறது.
மொத்தத்தில் தமக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை பார்ப்பதற்காக ரகளை செய்த இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை பார்க்கும் பலரும் இது தேவையா என சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.
King Kohli Fans Mass ???
— Virat Kohli Trends™ (@TrendVirat) March 13, 2022
3 Fans Jumped the Security Fence to meet their Idol @imVkohli ? pic.twitter.com/T3vc4dnpqF
Fan Moment ?? #ViratKohli #ViratKohli? #KingKohli ?@imVkohli pic.twitter.com/CU5aQKVBcq
— Bhuuuva (@bhuuuva) March 14, 2022