ஒற்றை ஆளாய் எதிர்த்து நின்ற விராட் கோலி - இணையத்தில் தெறிக்கவிடும் ரசிகர்கள்
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமாக சொதப்பியுள்ளது. முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் நடையை கட்டினர்.
அடுத்ததாக 94 ரன்கள் பார்ட்னர்ஷுப் கொடுத்து வந்த புஜாராவும் 43 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் ஒட்டுமொத்த பிரஷரும் கோலியின் மீது விழுந்தது. மிடில் ஆர்டரில் இருந்த ரகானே, (9), ரிஷப் பண்ட் (27), அஸ்வின் ( 2 ) என வந்த வேகத்தில் வெளியேறினர்.
ஆனாலும் மறுமுனையில் துண் போல நின்று விராட் கோலி, ஒன்மேன் ஷோ காட்டினார். ஆக்ரோஷமாக ஆடும் அவர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக விளையாடினார்.
கோலி ஃபார்மில் இல்லை என அசால்டாக நினைத்த தென்னாப்பிரிக்க பவுலர்கள் அவரை அவுட்டாக்க முடியாமல் சோர்ந்தே விட்டனர். இதன்பின், 201 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு கிளாசிக் அடித்து 79 ரன்கள் சேர்த்தார். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 என்ற ஸ்கோரை எட்டியது.

இந்த நிலையில், கோலி எப்படி தென்னாப்பிரிக்க பவுலர்களை எதிர்கொண்டார் என்பது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அதில் சிக்ஸர், மாஸ்டர் கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் என பழைய கிளாசி கோலி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் கோலியை பார்ப்பது போன்றும், ஒற்றையாளாக கோலி அவர்களை எதிர்கொள்வது போன்றும் புகைப்படமானது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.
என்னதான், விராட்கோலியின் பேட்டிங்கை பற்றி கடந்த சில ஆண்டுகளாக பலரும் திட்டு தீர்த்தாலும் இந்த ஒற்றை புகைப்படத்தால் பதில் சொல்லிவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Indian innings summed up in a pic. Once again onus on bowlers to keep us in the game. #SAvIND #ViratKohli pic.twitter.com/vsRasnJAy0
— Wasim Jaffer (@WasimJaffer14) January 11, 2022