போட்டிக்கு முன் முட்டியிட்டு இந்திய வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. உலகெங்கும் குவியும் ரசிகர்களின் ஆதரவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இல்லாமல் அபார வெற்றியை பதிவு செய்து இந்தியாவுக்கு எதிரான வரலாற்றை மாற்றி அமைத்தது.
இதனால், இந்திய வீரர்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அப்போது இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக முட்டியிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர். இதைக்கண்ட ரசிகர்கள் குழம்பி போனார்கள். தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில், அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளோய்ட் என்ற நபரை போலீசார் கால் முட்டியால் கழுத்தை நசுக்கி கொலை செய்தார். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் வன்முறையை எதிர்த்து, இந்திய வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இதை செய்துள்ளனர்.
மேலும், அதை ஏன் இந்திய அணியினர்கள் இந்த போட்டியில் செய்ய வேண்டும் என கேள்வி எழும்பிய நிலையில், அதற்கு இந்தியா, பாகிஸ்தான் போட்டியை உலகமெங்கும் பார்ப்பவர்கள் அதிகம்.,
ஆகையால், இந்த போட்டியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், மக்களுக்கு அவை சீக்கிரம் கொண்டுபோய் சேர்க்கும் என இதை செய்துகாட்டியுள்ளனர்.
Respect, Team India. pic.twitter.com/Y4gzgmlNhn
— Johns. (@CricCrazyJohns) October 24, 2021