அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து ஜாம்பவான்களின் இடத்தின் வரிசையில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் மயங்க் அகரவால் நிதனமான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ஆனால், மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இதன் பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா, சுப்மான் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.
பின்னர், சுப்மான் கில் 52 ரன்களில் ஜேமிசன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனிடையே, சற்று அதிரடியாக விளையாடிய ரஹானே 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் ஸ்டம்புகள் சிதற, பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய அறிமுக வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார்கள். போட்டியின் இறுதியில் இந்திய அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.
ஜடேஜா 50 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். இருப்பினும் அவர் 103 ரன்களுக்கு சவுதி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். விர்திமான் சாஹா மீண்டும் சொதப்ப, தமிழக வீரர் அஸ்வின் மட்டும் தன் பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார்.

இதனால் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 5 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மேலும், 2-வது நாள் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு, இந்தியாவை 350 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது. தற்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.