வருமானத்தை இரட்டிப்பாக மாற்ற இந்த எளிய பரிகாரம் போதும்
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான தேவை அது என்றல் பணம் தான்.
இந்து சாஸ்திரத்தில் துன்பங்களை எளிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சரிசெய்யலாம் என ஞான நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் வருமானத்தை அதாவது பணத்தை இரட்டிப்பாக அதிகரிக்க செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
வருமானத்தை இரட்டிப்பாக்கும் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு ஒற்றை இதழ் செம்பருத்தி பூ மற்றும் ஒரு காப்பர் சொம்பு இவை இரண்டும் தேவையானவை.
செம்பருத்தி பூவை, பரிகாரம் செய்யும் முந்தைய நாள் இரவிலே மொட்டாக பறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக அந்த காப்பர் சொம்பில் முழுவதும் சுத்தமான தண்ணீர் பிடித்து வைத்து அதில் பறித்து வைத்திருந்த செம்பருத்தி பூவை சேர்த்து சிறிய தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தையம் அன்னை மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உள்ள செம்பருத்தி பூவை தண்ணீர் இல்லாமல் உதறி உங்க இஷ்ட தெய்வத்திற்கு அல்லது மகாலக்ஷ்மி தாயாரின் படத்திற்கு வைக்கவேண்டும்.
இதனைத்தொடர்ந்து அந்த சொம்பில் உள்ள பூ போட்டு வைத்து தண்ணீரை குடிக்கவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்பு நிச்சயமாக வரும் என்று சொல்லப்படுகிறது.
பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது அவர்களுக்கான மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது இதற்கான மாற்றத்தை கண்டிப்பாக உணர முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |