போனின் வேகத்தை அதிகரிக்கனுமா? WhatsApp-ல் இதை மட்டும் செய்தால் போதும்
ஸ்மார்ட்போன்கள் மெதுவாக இயங்க ஆரம்பிக்கும் நிலையில், இதற்கான தீர்வினை வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பாவித்து வரும் மொலைபல் தான் ஸ்மார்ட் போன் ஆகும். இவ்வாறு அனைவருக்கும் உதவியாக இருந்து வருவதால், இதை தான் அதிகமானோர் விரும்பி வாங்குகின்றனர்.
ஆனால் இவ்வாறு நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் சில தருணங்களில் மிகவும் மெதுவாகவே இயங்க ஆரம்பித்துவிடும். இதற்கு காரணம் அதிக ஆப்கள், பைல்கள் ஆகும்.
ஆகவே தேவையற்ற ஆப் மற்றும் பைல்களை அவ்வப்போது அழித்துவிடுவது நல்லதாகும். மேலும் போனின் வேகம் குறைவதற்கு வாட்ஸ் அப்பும் ஒரு காரணமாகும்.
WhatsAppக்கு அதிக ஸ்டோரேஜ் கொடுக்கும். WhatsAppஐ பயன்படுத்திக் கொண்டே இருந்தால் ஸ்டோரேஜ் நிரம்பி போன் மெதுவாக வாய்ப்புள்ளது.
எப்படி தெரிந்து கொள்வது?
வாட்ஸ்அப் செட்டிங்கில் 'ஸ்டோரேஜ் & டேட்டா' ஆப்ஷன் உள்ளது. வாட்ஸ்அப் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்துகிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.
எந்த சாட் மூலம் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் யாருடன் அதிக டேட்டாவைப் பகிர்ந்துள்ளீர்கள் என்பது தெரியுமாம்.
முதலில் வாட்ஸ் அப்பை ஓபன் செய்து மேலே வலது புறத்தில் இருக்கும் 3 புள்ளிகளை க்ளிக் செய்யவும். இதில் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனில் செல்லவும்.
அதில் Storage and data என்பதை ஓப்பன் செய்து, manage storage என்பதை கிளிக் செய்யவும். அப்பொழுது வாட்ஸ் அப் எவ்வளவு டே்டட்டாவை பயன்படுத்தியுள்ளது. எவ்வளவு இடம் காலியாக இருக்கும்? சேட்களுக்கு எவ்வளவு டேட்டா பயன்படுத்துகின்றீர்கள் என்பது தெரியவரும்.
இப்போது தேவையற்ற டேட்டாவை நீக்கவும். ஸ்டோரேஜ் காலியாகும். இதன்மூலம் போன் வேகமும் அதிகரிக்கும்.
கேலரியில் புகைப்படம் சேமிக்க வேண்டாமா?
WhatsApp ஸ்டோரேஜ் நிரம்ப இன்னொரு காரணம் ‘மீடியா தெரிவுநிலை’. இந்த விருப்பம் ஆன் செய்திருந்தால் WhatsAppல் வரும் புகைப்படம், வீடியோக்கள் கேலரியில் சேமிக்கப்படுவதால் விரைவில் ஸ்டோரேஸ் நிரம்பிவிடும்.
முதலில் WhatsAppல் ஒரு நபரின் சேட்டை Open செய்ய வேண்டும். திறந்த பின்பு அவர்களது பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.
இதில் Media Visibility என்ற தெரிவுக்கு சென்று அதனை Off செய்து வைக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் Off செய்துவிட்டால், குறித்த நபர் அனுப்பும் புகைப்படங்கள், காணொளிகள் உங்களது Gallery-ல் சேமிக்கப்படாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |