Hair Growth: முடி இரண்டு மடங்கு வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யில் இதை கலந்து பயன்படுத்துங்க
தலைமுடி இரண்டு மடங்கு தாறுமாறாக வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு ஆகும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது. தேங்காய் எண்ணெய்யுடன் நெல்லிக்காய் பொடி சேர்த்து பயன்படுத்தினால் கூந்தல் நன்றாக வளரும்.
இதில் உள்ள வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தியை அதிகரித்து கூந்தல் வளர்ச்சிக்கு அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லயுரிக் ஆசிட் கூந்தல் வறட்சியடையாமல் மிருதுவாக வைத்திருக்க உதவுகின்றது.
நெல்லிக்காய் பொடி கலந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் வைத்து 1 மணி நேரம் மசாஜ் செய்த பின்பு ஷாம்பு போட்டு அலசினால் பேன், ஈறு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.
நெல்லிக்காயின் பயன்கள்
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன், வயிற்று புண்களை குணமாக்கவும் செய்கின்றது.
இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், நோய் தொற்றுகள் வராமலும் தடுக்கின்றது.
நெல்லிக்காயில் இருக்கும் பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தின் போது நிகழும் ஒவ்வொரு செல்லில் இருந்து வெளியேறும் கழிவுகள், சரியாக வெளியேற்றப்படவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்பட்டு இது இறுதியில் புற்றுநோயை ஏற்படுத்தும். இந்த பிரச்சினையையும் வராமல் நெல்லிக்காய் தடுக்கின்றது.
குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுக்கலாமா?
குழந்தைகள் பள்ளிக் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டியலிலில், ஒரு நெல்லிக்காயை மட்டும் வெட்டி சிறு சிறு துண்டுகளாக போட்டுவிடவும்.
நெல்லிக்காய் ஊறிய இந்த தண்ணீரை பருகும் போது உடம்பிற்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் கிடைத்துவிடும்.
ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |