Healthy Breakfast: இந்த பொருட்கள் இல்லாமல் இனி காலையுணவு செய்யாதீங்க
தற்போது இருக்கும் அவசர உலகில் பெரும்பாலானவர்கள் காலையுணவை சாப்பிடாமல் தவிர்த்து விடுகிறார்கள்.
ஆனால் மருத்துவர்களின் ஆலோசனை படி, காலையுணவு சாப்பிடாதவர்களுக்கு தான் அதிகப்படியான நோய்கள் வருவதாக கூறப்படுகின்றது.
காலையுணவுவை ஆரோக்கியமான முறையில் எடுத்து கொள்ளும் போது அன்றைய நாளுக்கான சக்தியை பெற்றுக் கொள்ளலாம். அஜீரண கோளாறு, வயிற்று புண் இப்படியான நோய்கள் வருவதையும் கட்டுபடுத்தலாம்.
அந்த வகையில் காலையுணவு தயாரிக்கும் பொழுது இலகுவில் செரிமானமடையும் உணவுகளை சேர்ப்பது சிறந்தது. அதாவது பழங்கள், காய்கறிகள், சாலட் இப்படியான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
இது போன்ற ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பப்பாளி பழம்
காலையுணவுடன் பப்பாளிபழம் எடுத்து கொள்ளலாம். ஏனெனின் பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.
அத்துடன் பப்பாளி பழம் துரிமாக செரிமான அடையும். காலையில் இதனை எடுத்து கொள்பவர்களுக்கு செரிமான பிரச்சினை, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.
2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு காலையுணவுடன் சேர்த்து கொள்வது சிறந்தது. இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
மேலும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
3. வாழைப்பழம்
குடல் இயக்கத்தை எளிமைப்படுத்தும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு இருக்கின்றது. இது கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் இலகுவாக்குகிறது. இதனால் காலையுணவுடன் வாழைப்பழம் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |