சாவகாசமாக வேனை திறந்து கரடி செய்த சம்பவம்! வியப்பில் ரசிகர்கள்
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பிரதேசத்தில் வேன் கதவைத் திறந்து பாப்கார்ன் திருடும் கரடியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிருகங்களுக்கு நடக்கும் கொடுமைகள்
காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் அதிகமாகி வருகிறது. இதனால் காட்டில் வாழும் மிருகங்கள் சில நகரை நோக்கி சென்றுள்ளது.
இதன்படி, அமெரிக்காவிலுள்ள Tennessee எனும் மாகாணத்தில் கருப்பு நிற கரடியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனை திறந்து பாப்கார்னை திருடிச் சென்றுள்ளது.
குறித்த வேனிற்கு சொந்தகாரர் குடும்பத்தினருடன் Gatlinburg பகுதியில் வேனை நிறுத்தி விட்டு, ஹோட்டலில் அறையொன்று எடுத்து தங்கியுள்ளனர்.
இதன்போது அவ்வழியில் வந்த கரடியொன்று, வேனின் கதவை திறந்து, அதிலிருக்கும் பாப்கார்ன் பாக்கெட்டை எடுத்து செல்கிறது.

புகைப்படங்கள்
இந்த காட்சி வேனிற்கு அருகாமையிலிருக்கும் சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
