எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்... காரணம் என்ன?
எதிர்நீச்சல் சீரியலிலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க வீட்டில் உள்ள பெண்கள் முயற்சித்து வருகின்றனர். தற்போது ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சலில் இருந்து விலகிய நடிகை
ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் அப்பத்தா கண்விழித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியிலிலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளாராம்.
கதாநாயகி ஜனனியின் மாமன் மகளாக வாசுகி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷ்ணவி. துறுதுறுப்பான மற்றும் தைரியமான பெண்ணாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
தற்போது இவர் புதுவசந்தம் என்ற புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |