இமான் அண்ணாச்சிக்கு அடித்த அதிர்ஷ்டம்: வெளியே வந்ததும் யாரை சந்தித்தார் தெரியுமா? முதல் காணொளி இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினத்தில் வெளியேறிய இமான் அண்ணாச்சி முதன்முதலாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகியுள்ளது. நாட்கள் நெருங்கிவரும் நிலையில் உள்ளே சென்ற போட்டியாளர்களின் விளையாட்டும் வெறித்தனமாகவே இருக்கின்றது.
சண்டை, அழுகை, சமாதானம் என செல்லும் இந்நிகழ்ச்சியின் பிரச்சினைகளை வாரத்தில் இரண்டு தினங்கள் நடிகர் கமல் வந்து தீர்த்து வைக்கின்றார். அதுமட்டுமின்றி நேற்றைய தினத்தில் இமான் அண்ணாச்சி தன்னுடன் படத்தில் நடிக்க வைப்பதாக கமல் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சியை ஐக்கி பெர்ரி வீட்டில் சென்ற சந்தித்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி இடையே பாசமான உறவும் காணப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிபெர்ரி மற்றும் அண்ணாச்சி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.