இதைப்பார்த்தால் உங்கள் கண்களை நீங்க நம்ப மாட்டீங்க!
சமீபகாலமாக Illusion வீடியோக்கள், புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது.
Illusion என்பது வெயில் காலங்களில் நண்பகல் நேரத்தில் பயணம் செய்யும் போது சற்று தொலைவில் தண்ணீர் தேங்கி நிற்பதைப் போல தோன்றும், அருகில் சென்று பார்த்தால் அங்கே தண்ணீர் இருக்காது. இதனை கானல் நீர் என்கிறோம்.
இது கண் உணரும் மாய உணர்ச்சியாகும். எட்ட நின்று பார்க்கும் போது பாம்பாக தோன்றும் கயிறும் ஒருவித மாய உணர்ச்சியாகும்.
நெல்லிக்கனியைத் தின்று விட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பாக நாக்கு உணருகிறது. உண்மையில் தண்ணீரில் இனிப்பு இல்லை. இது நாக்கு உணரும் மாய உணர்ச்சியாகும்.
இப்படி நம் கண்ணையே நம்ப முடியாதவற்றையே Illusion என்கிறோம், அந்த வகையில் தன் உடல் பாகங்களில் ஓவியங்கள் வரைந்து அசரவைக்கிறார் கனடாவை சேர்ந்த Mimi Choi.
சமூகவலைத்தளங்களில் தன்னுடைய திறமையால் வளர்ந்து வரும் கலைஞர் Mimi Choi, முகம், கால், கைகள் என தன்னுடைய உடல் பாகங்களில் அழகாக ஓவியங்களை வரைந்து மெய்சிலிர்க்க வைத்து விடுகிறார்.
அவரது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட பலரும் கண்சிமிட்டாமல் ரசித்து வருகின்றனர்.