உயிரை காவு வாங்கும் மர்ம தீவு: தீவிற்குள் நிகழும் மர்மம் தான் என்ன?
உலகில் மனிதர்கள் வாழ ஆபத்தான இடங்களில் ஒன்றாக பிரேசிலில் இல்ஹா டா குய்மாடா கிராண்டே என்ற பாம்பு தீவு காணப்படுகின்றது.
பிரேசில் சாவோ பாலோ கடற்கரையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவிற்குள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு சதுரமீற்றருக்கும் ஒரு பாம்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த தீவில் அதிக பாறைகள் கொண்ட நிலப்பரப்பாகவும், வெப்ப மண்டல பகுதியாகவும் இருப்பதால் மனிதர்களோ, வேறு விலங்குகளோ இங்கு வாழ முடியாத நிலையில், பாம்புகள் தன்னை வேட்டையாட எந்த உயிரினமும் இல்லாத காரணத்தினால் தனது இனப்பெருக்கத்தினை அதிகரித்து, தன்னுடைய தீவாக மாற்றியுள்ளது.
இந்தத் தீவிற்கு ஓய்வெடுக்க வரும் பறவைகளை உணவாக எடுத்துக்கொள்ளும் இந்த பாம்புகளில் தனித்துவமான ஒரு பாம்பு இனம் உள்ளது.
அதன் பெயர் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ் என்ற இனம் குறித்த தீவினைத் தவிர மற்ற எங்கும் காணப்படவில்லை, மேலும் பூமியில் முக்கிய ஐந்து விஷ ஜந்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
கோல்டன் லான்ஸ்ஹெட் என்பது லான்ஸ்ஹெட் என்னும் பாம்பு இனத்தின் ஒரு பகுதியாகும். உடலுக்குள் சென்று வேகமாக செயல்படும் விஷத்தை இந்த பாம்புகள் கொண்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய இனமான ஜரராகா என்னும் இனத்தை விட கோல்டன் லான்ஸ்ஹெட் ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டது.
இதனுடைய சக்தி வாய்ந்த விஷம் சதை பகுதியை தாண்டி சென்று ரத்தபோக்கில் கலந்து உடலுறுப்பை செயலிலக்க செய்கிறது. கோல்டன் லான்ஸ்ஹெட் 70 சென்டிமீட்டர் வரை வளர கூடியது. ஆனால் அவற்றில் சில ஒரு மீட்டருக்கு மேல் வளரும் என்றும் கூறப்படுகிறது.
மனிதர்கள் செல்ல தடை
இந்த தீவிற்கு மனிதர்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதோடு, அங்கிருக்கும் அரிய பாம்பு இனங்களை மனிதர்கள் கைப்பற்ற நினைப்பார்கள் என்பதால் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
புராண கதை
தீவை பற்றியும் அங்கு குடியிருந்தவர்கள் குறித்தும் புராணங்களில் கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாம்புகள் கூட்டமாக சென்று அங்கே கலங்கரை விளக்கத்தை பாராமரித்தவரையும் அவரது குடும்பத்தையும் மொத்தமாக துடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது. அதே போல மூன்று மீனவர்கள் அங்கே உள்ள குளத்தில் பாம்புகளால் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
மிகக்கொடிய விஷம் கொண்ட பாம்பாக கருதப்படும் கோல்டன் லான்ஸ்ஹெட் தாக்கப்பட்டு மனிதர்கள் இறந்ததாக எந்த தகவலும் கிடையாது.
சட்டவிரோதம்
குறித்த தீவிற்கு வருவது சட்ட விரோதமாகும். அவ்வாறு வர வேண்டும் என்றால் கடற்படையின் அனுமதி வேண்டுமாம்.
குறித்த பாம்புகள் ஒரு வேளை கடித்துவிட்டால் அவற்றிற்கான மாற்று மருந்து 150 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாவோ பாலோவினில் உள்ள புட்டாண்டே என்னும் நிறுவனத்தில் உள்ளது.
சிறிய பாம்பின் கடி கூட ஆபத்தான விஷம் என்பதால் உலகின் மிகவும் ஆபத்தான தீவுகளில் ஒன்றாகவும் மனிதர்கள் வாழவே தகுதியற்ற தீவாகவும் பார்க்கப்படுகிறது.