”இளமை இதோ இதோ”... பாட்டு பாடி புத்தாண்டு வாழ்த்து கூறிய இளையராஜா
சில மணிநேரங்களில் ஆங்கிலப்புத்தாண்டு 2022 பிறக்கவுள்ள நிலையில், நோய்கள் நீங்கி மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
பலரும் பல வகைகளில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் இசைஞானி இளையராஜா, அவரது குரலில் பாட்டு பாடி புத்தாண்டை வரவேற்றுள்ளார்.
இன்று காலை அவர் வீட்டிலிருந்து ஸ்டூடியோவிற்கு காரில் செல்லும் போது, பயணித்தபடியே தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் 'இளமை இதோ இதோ. இனிமை இதோ..' என பாடல் பாடியுள்ளார்.
இன்று காலை அவரது உடல்நிலை குறித்த வதந்தி பரவிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்த வீடியோவை கமல்ஹாசன் முதல் முக்கிய பிரபலங்கள் பலரும் ரீ டுவிட் செய்து வருகின்றனர்.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021