குழந்தை வரனுக்காக ஏகப்பட்ட சிகிச்சையில் ஈடுபட்ட பவதாரிணி
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி திருமண வாழ்க்கை குறித்து ஊடகத்திற்கு ஜெயந்தி கண்ணப்பன் நேர்காணல் வழங்கியுள்ளார்.
பவதாரிணி திருமண வாழ்க்கை
பவதாரிணிக்காக பல இடங்களில் நானும் அவளுடைய அம்மாவும் சேர்ந்து மாப்பிளை தேடினோம். பல வரன்கள் வந்தன.. ஆனால் அதில் ஒன்றுக் கூட பவதாரிணிக்கு விருப்பமில்லை.
இறுதியாக, செங்கல்பட்டு அருகே உள்ள பாலத்திற்கு கீழே இருக்கும் கன்னி கோயிலுக்கு சென்று வழிப்பட்டால் நல்ல வரன் உடனே வரும் என பலர் கூறியிருந்தார்கள்.
எனவே நானும் அவளது தாயும் சேர்ந்து அக்கோயிலுக்கு சென்றோம். அதன் அடுத்த வாரமே அவளுக்கு நல்ல வரன் அமைந்தது. மதுரையில் வசிக்கும் சபரி என்பவருடன் சம்பந்தம் பேசப்பட்டது.
அவர்கள் இருவருக்கும் ஜாதகம் பார்த்தோம். பொருத்தம் இருந்தது. பவதாரிணிக்காக வித்தியாசம், வித்தியாசமாக நகைகள் வாங்கினார்கள். திருமணமும் சந்தோஷமாக நடந்து முடிந்தது.
மகளின் திருமணத்திற்காக இளையராஜா மிகவும் சந்தோஷமாக இருந்தார் என ஜெயந்தி கண்ணப்பன் நேர்காணலில் கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனின் மகன் சபரி ராஜனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வந்தன.
மேலும் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் குழந்தைகளே இல்லை என ஏகப்பட்ட சிகிச்சைகளையும் பவதாரிணி எடுத்துக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |