வெள்ளைப்படுதல் பிரச்சினையை ஒரே நாளில் விரட்டியடிக்கும் இளநீர் டிலைட்! இந்த பொருட்கள் இருந்தால் போதுமாம்..
பொதுவாக பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் உடம்பு சூடு முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இதனால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், வயிற்று பகுதியில் அடிக்கடி வலி, உடல் எடை குறைவு மற்றும் மாதவிடாய் பிரச்சினை என பல பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பயனற்றவையாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினையால் பெண்களுக்கு பொது இடங்களில் அதிக நேரம் இருக்க முடியாத நிலைக்கூட ஏற்படலாம்.
இதனை கட்டுபடுத்தும் வகையில் தான் வீட்டிலுள்ள பெரியவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் குளிக்க வேண்டும், வெந்தயம் சாப்பிட வேண்டும், குளிர்மை பொருந்திய உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றலெல்லாம் கூறுவார்கள்.
இது போன்ற பிரச்சினைகளை கட்டுபடுத்தும் வகையில் தான் மருத்துவர்கள் அடிக்கடி தயிர் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகளையும் தண்ணீரையும் அதிகம் எடுத்துக் கொள்ளுமாறு கூறுவார்கள்.
அந்த வகையில் உடல் சூட்டை ஒரே நாளில் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும் இளநீர் டிலைட் எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு பவுல்
- பால் - 3 பவுல்
- சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
- தேங்காய்பால் - ஒரு பவுல்
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சுத்தமான பாலைக் கலந்து சக்கரை சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
காய்ச்சி இறக்கியதும் சூட்டை அற வைக்க வேண்டும். (பால்கோவாவிற்கு முந்தைய பதம்) இதன்பின்னர் பால் நன்றாக ஆறியிருக்கும் அதனை பார்க்கும் பாலாடை மேல் நிற்கும்.
அப்போது பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் என்பவற்றை சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.
சுமார் 10 -15 நிமிடங்கள் கலவைக் கோப்பையை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சூப்பரான இளநீர் டிலைட் ரெடி.
முக்கிய குறிப்பு
(தேவைக்கேற்ப பவுலின் அளவை மாற்றிக் கொள்ளலாம்)